ஐ.பி.எல். தொடர்: மும்பை- ஹைதராபாத் அணிகள் மோதல்!
ஐ.பி.எல். தொடரின் 7ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள், பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஹைதராபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மாவும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சனும் தலைமை தாங்குகின்றனர்.
நடப்பு தொடரை பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணி முதல் லீக் போட்டியில் சென்னையுடன் தோல்வியடைந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.
ஆகையால், இன்றைய போட்டியில், மும்பை அணி முதல் வெற்றியை பதிவுசெய்யும் ஆவலில் உள்ளது. ஹைதராபாத் அணி இரண்டாவது வெற்றியை பெறும் முனைப்பில் இன்று களமிறங்கவுள்ளது. இரு அணிகளுமே பலம் பொருந்திய அணிகள் என்பாதல் இப்போட்டியின் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

.jpeg
)





கருத்துகள் இல்லை