வடக்கில் தேங்காய் பறித்தவர்களுக்கு பதவி!

குளியாப்பிட்டிய பகுதியில் தேங்காய் பறித்தவர்களை வடக்கில் அலுவலக உதவியாளர்களாகவும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாகவும் நியமித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 
நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

"தமிழ்ப் பேசும் மக்கள் 100% வாழும் பகுதிகளில் தமிழ் பேச தெரியாதவர்களை வேலைக்கமார்த்தியுள்ளனர். யாழ்ப்பாணம் கச்சேரியில் பணிபுரியும் ஆறு ஓட்டுனர்கள் காலி பகுதியில் இருந்து வந்துள்ளனர். வடக்கில் ஏன் காலி பகுதியை சேர்ந்த ஓட்டுனர்களை நியமித்துள்ளார்கள்? குளியாப்பிட்டிய பகுதியில் தேங்காய் பறித்தவர்களை வடக்கில் அலுவலக உதவியாளர்களாகவும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாகவும் நியமித்துள்ளார்கள். தேங்காய் பறிக்க யாரும் இல்லாமல் போனதால் தான் தற்போது தேங்காய் விலை அதிகரித்து இருக்கலாம்" என அவர் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.