ஹூலு கங்கையில் நீராடிய ஐந்து பேர் மரணம்!

கண்டி - பன்வில பிரதேசத்தில் ஹூலு கங்கையில் நீராடிய ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மகாவலி கங்கையுடன் இணையக் கூடிய ஹூலு கங்கையில், களு பாலத்திற்கு அருகில் மூன்று பெண்கள் உட்பட 05 பேர் இன்று பின்னேரம் நீராடிக் கொண்டிருந்துள்ளனர். 

இந்நிலையில் இவர்கள் ஐந்து பேரும் ஆற்றில் மூழ்கியதையடுத்து பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நான்கு பேரின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர். 

இதில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் உள்ளடங்குவதுடன், காணாமல் போயுள்ள நபரின் சடலத்தை தேடும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Powered by Blogger.