யாழ்.வடமராட்சியில் மீட்கப்பட்ட கைக்குண்டு!

யாழ்.வடமராட்சி இன்பருட்டிப் பகுதியில் காணியொன்றிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் இன்று(26) தெரிவித்துள்ளனர்.
காணியின் உரிமையாளர் நேற்றுக் காலை தனது காணியைத் துப்பரவு செய்யச் சென்ற வேளை குறித்த கைக்குண்டைக் கண்டு பருத்தித்துறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்துக் குறித்த கைக்குண்டைப் பொலிஸார் மீட்டுச் சென்றுள்ளனர். கைக்குண்டு காணிக்குள் எவ்வாறு வந்தது? என்பது தொடர்பில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.