காவற்துறையின் தாக்குதலுக்கு உள்ளான பெண்கள்!

எப்பாவலை பிரதேச விகாரை பூமியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்த போது, காவற்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளான மேலும் இரண்டு பெண்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 குறித்த விகாரையின் அதிபதியாக இருந்த பிக்கு ஒருவரை மீண்டும் அந்த பதவியில் அமர்த்துமாறு வலியுறுத்தி கடந்த தினம் இந்த போராட்டம் இடம்பெற்றது.

 இதன்போது தாக்குதலுக்கு உள்ளான கர்ப்பிணிப் பெண் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.   இந்தநிலையில் ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இரண்டு பெண்கள், தாங்கள் காவற்துறையினரால் தாக்கப்பட்டதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிபெற்றுள்ளனர்.

 அவர்களில் ஒருவர் மூச்சித்தினறலுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Powered by Blogger.