லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதி கிரியை அரசாங்க அனுசரணையுடன் நடைபெறும்!

காலமான பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதி கிரியை அரசாங்க அனுசரணையுடன் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

 கொழும்பில் உள்ள தனியார் மருத்துமனையொன்றில் சிகிச்சைப்பெற்று வந்த இயக்குனர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் நேற்று இரவு தனது 99 ஆவது வயதில் காலமானார்.

 அவரின் தேகம் அஞ்சலிக்காக கொழும்பு - 5 கலாநிதி ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

Powered by Blogger.