ராணுவமையமாக்கப்படும் தமிழகம் ??

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான விளைநிலங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு, அந்தப் பகுதியை வாழத் தகுதியற்றதாக மாற்றுவதே ராணுவ மண்டலம் அமைக்கும் திட்டத்தின் நோக்கம் எனலாம்...
மத்திய அரசின் அந்தத் திட்டம் இப்போது நிறைவேறி விட்டது. தமிழகத்தில் இனி எஞ்சியிருக்கும் விளைநிலங்களையும் விஷ நிலங்களாய் மாற்ற வேண்டியது மட்டும்தான் பாக்கி..." என்று அதிர்ச்சியைக் கொட்டுகிறார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன்.
அவரிடம் பேசியபோது, ``காவிரி உரிமைக்காக, தமிழ்நாடே கொந்தளித்துக்கொண்டிருக்கும் வேளையில், `டிஃபென்ஸ் எக்ஸ்போ-வை', இங்கே நடத்த வேண்டிய தேவை என்ன? காவிரியில் தண்ணீர் வராததற்கும் இந்த `டிஃபென்ஸ் எக்ஸ்போ'-வுக்கும் இடையேயான தொடர்பை நாம் சந்தேகத்துடன்தான் அணுக வேண்டியிருக்கிறது. தமிழகத்தை ராணுவ மண்டலமாக (மிலிட்டரி-டிபென்ஸ் ஸோன்) மாற்றும் முயற்சியில் மத்திய அரசு வேகமாக முன்னேறி வருவதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
சில மாதங்களுக்கு முன் வெளியான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் `தமிழகத்தில், ராணுவ வழித்தட மண்டலம் (Defence corridor) அமைக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டது. `ஓசூரில் தொடங்கி கோவை, திருச்சி, ஆவடி, கல்பாக்கம் ஆகிய ஊர்களை இணைத்து காட்டுப்பள்ளித் துறைமுகத்தில், ராணுவ மண்டலம் முடியும்' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவித்த ஒரு மாதத்திற்குள்ளாக, தற்போது டிஃபென்ஸ் எக்ஸ்போ-வை மத்திய அரசு, திருவிடந்தையில் நடத்தியுள்ளது.
Powered by Blogger.