பிரதான தொடரூந்து பாதையில் போக்குவரத்து பாதிப்பு!

பிரதான தொடரூந்து பாதையில் பொல்கஹவெல மற்றும் அலவ்வ இடையே தொடரூந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அலவ்வ தொடரூந்து நிலையத்திற்கு அருகில் இன்று காலை தொடரூந்தொன்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு இதற்கு காரணமாகும்.

 இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ள தொடரூந்தை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
Powered by Blogger.