மேட்டூர் அணையை ஜூன்12ந்தேதி திறந்து விட முடியாது.!

43- வது கோடைக்கால சிறப்பு ஏற்காடு மலர்க்கண்காட்சியை  திறந்து வைத்து பின் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கிவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார் முதல்வர் அதில்

திட்டமிட்டபடி மேட்டூர் அணையை ஜீன் 12ந்தேதி திறக்க  முடியாதென முதல்வர் தெரிவித்துள்ளார்.  பருவமழை பெய்து அணையில் தண்ணீர் நிரம்பும் போது மேட்டூர் அணை திறந்து விடப்படும். தற்போது மழை பெய்து வருகிறது, இந்த ஆண்டு நன்றாக மழை பெய்யும் அணையில் நீர் வரத்து அதிகரித்தால் திறந்து விடப்படும் எனக் கூறினார்.

காவிரி டெல்டா கடைமடைப்பகுதிகளின் பாசனத்துக்காக வருடந்தவறாமல் ஜூன் 12ந்தேதி மேட்டூர் அணை நீர் திறந்து விடப்படும் இந்நிலையில் இந்த வருடம் திட்டமிட்டபடி மேட்டூர் அணையை திறக்க முடியாதென முதல்வர் தெரிவித்திருப்பதால் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
Powered by Blogger.