அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரும் மஹிந்தவை சந்திப்பர்!

அரசாங்கத்திலிருந்து விலகிய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (20), முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக, 16 பேரில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்ருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அதன் பின்னர், தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணாயக்கார போன்ற, நாடாளுமன்றத்தில் எதிரணியைச் சேர்ந்த கட்சித் தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாட எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமது குழுவினர், மகாநாயக்கத் தேரர்கள் மற்றும் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியதாகத் தெரிவித்த யாப்பா, எதிர்வரும் 26ஆம் திகதி முதல், பல கூட்டங்களை நடத்த எதிர்ப்பார்த்து இருப்பதாகவும் இதன் முதலாவது கூட்டம், மாத்தறையில் நடத்தப்படவுள்ளதாகவும், குறிப்பிட்டார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, அதற்கான காரணிகளை, உரிய நிபுணர்களைக் கொண்டு, பொதுமக்களிடம் விளக்குவதே, தமது கூட்டங்களின் நோக்கமெனவும், லக்ஷ்மன் யாப்பா தெரிவித்தார்.
Powered by Blogger.