சிங்களத் தலைமைத்துவம் – சிக்கலில் சிக்கியிருக்கின்றது- கூறுகிறார் விக்கி.

சிங்­க­ளத் தலை­மைத்­து­வம் சிக்­கல்­க­ளைச் சந்­திக்­கும் இந்­தத் தரு­ணத்­தில்­தான், ஒன்­று­பட்டு எமக்கு நேர்ந்த, நேர்ந்து கொண்டி ­ருக்­கும் இடர்­க­ளைப் பற்றி எல்­லாம் உல­க­றி­யச் செய்ய வேண்­டும்.
சுயாட்­சியை வழங்க அவர்­களே முன்­வர வேண் டும். ஒரு கட்­டத்­தில் தமது தேவை­யின் நிமித்­தம் எமக்­கு­ரிய சுயாட்சி உரி­மையை அவர்­கள் கைய­ளிக்­கும் சந்­தர்ப்­பம் ஏற்­ப­டும் என்­ப­தில் நாங்­கள் திட­மான நம்­பிக்கை வைக்க வேண்­டும். இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.
தமிழ் மக்­கள் பேர­வை­யின் நேற்­றைய கூட்­டத்­தில் உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
இளை­ஞர்­கள் சுய­ந­லன்­மிக்­க­வர்­கள்
இளை­ஞர் குழாம் பல விதங்­க­ளில் முன்­னைய காலத்­தில் வாழ்ந்த எம்­ம­வர்­க­ளில் இருந்து வித்­தி­யா­ச­மா­ன­வர்­கள். நாம் வய­துக்­கும் முது­மைக்­கும் மதிப்­புக் கொடுத்­தோம். இன்று அப்­ப­டி­யில்லை. இன்­றைய பிள்­ளை­கள் உலக விட­யங்­கள் பல­தை­யும் பத்­துப் பதி­னைந்து வய­துக்கு முன்­னரே அறிந்து கொள்­கின்­றார்­கள். உலக ஞானம் அவர்­க­ளுக்கு நிரம்­ப­வும் உண்டு. அதே போல் சுய­ந­ல­மும் அவர்­க­ளுக்கு அதி­கம். உலக ஞானத்­தில் திளைத்­த­வர்­கள் பொது­வா­கவே சுய­ந­ல­மி­க­ளாக இருப்­பார்­கள் என்­பது ஞானி­க­ளின் கருத்து.
எமது காலத்­தின் பின்­னர் எமது அர­சி­யல் சமூக அமைப்­புக்­க­ளைக் கொண்டு நடத்­தப் போவது இளை­யோரே. திடீர் என்று தலை­மைத்­து­வம் அவர்­கள் வசம் செல்­வ­தி­லும் பார்க்க இப்­பொ­ழு­தி­ருந்தே அவர்­கள் தமது காரி­யங்­களை, கடப்­பா­டு­களை, கட­மை­களை உணர்ந்து நடக்­கத் தொடங்­கி­னால் அது­நன்மை தரும் என்று நம்­பு­கின்­றோம்.
தமிழ் மக்­கள் பேரவை இளை­ஞர் மகா­நாடு ஒன்­றினை நடத்த வேண்­டும் என்று முடி­வெ­டுத்­தது.
எதிர்­கால ஏக்­கம்
இன்று எம்­மி­டையே ஒரு வித பல­வீ­னம் உரு­வா­கி­யுள்­ளது. இளை­யோ­ரி­ட­மும் காணப்­ப­டு­கின்­றது. ஆயு­தங்­கள் மௌனிக்­கப்­பட்­ட­தும் நாம் தோற்­று­விட்­டோம் என்ற ஒரு மனோ நிலை எங்­கள் மன­தில் குடி­கொள்­ளத் தொடங்­கி­யுள்­ளது. எமது எதிர்­பார்ப்­புக்­களை நடை­மு­றைப்­ப­டுத்த இனி யார் வரப் போகின்­றார் என்ற ஒரு நம்­பிக்கை அற்ற நிலை எட்­டிப் பார்க்­கத் தொடங்­கி­யுள்­ளது. இதனை மாற்றி இளை­யோ­ரின் மன­தில் வலு­வேற்­று­வது எமது பொறுப்பு.
உலக அதி கூடிய எடைக்­கு­ரிய குத்­துச் சண்டை வெற்றி வீர­னாக ஒரு காலத்­தில் வலம் வந்த மொக­மட் அலி குத்­துச் சண்டை அரங்­கி­னுள் நடந்து கொள்­ளும் விதத்­தைப் பார்த்­தி­ருக்­கின்­றீர்­களோ எனக்­குத் தெரி­யாது. வலை­யத்­த­ளங்­க­ளில் இப்­போ­தும் பார்க்­க­லாம். அரங்­கி­னுள் நட­ன­மா­டு­வது போல் அங்­கும் இங்­கு­மாக வலம் வரு­வார். அவர் தன்­மு­கத்­துக்கு எதி­ரி­யின் எந்த ஒரு குத்­தும் படா­மல் பார்த்­துக் கொள்­வார்.
எதி­ரி­யின் குத்­துக்­கள் பல­மாக இருந்­தால் தன் கைக­ளுக்­குள் எதி­ரி­யின் தலை­யைப் பிடித்து தொடர்ந்து அவர் குத்த முடி­யா­மல் ஆக்­கி­வி­டு­வார். நடு­வர் அப்­போது இரு­வ­ரை­யும் பிரித்து விடு­வார். இவ்­வாறே நட­ன­மாடி சுற்­றுக்­களை ஒவ்­வொன்­றாக முடித்­துக் கொண்டு எதி­ரி­யைப் பலம் இழக்­கச் செய்­வார். அதா­வது பலம் கொண்ட மட்­டில் எதிரி குத்த எத்­த­னித்து எத்­த­னித்து அவை வீண்­போ­கவே தனது பலத்தை மெல்ல மெல்ல அவர் இழக்­கத் தொடங்­கி­வி­டு­வார். முக­மட் அலி நட­ன­மா­டிக் கொண்டு அவ­ரி­டம் இருந்து தப்­பிப் போய் கொண்­டி­ருப்­பார். திடீ­ரென்று ஒரு சுற்­றில் அலி­யின் குத்­துக்­கள் எதி­ரி­யின் மீது சர­மா­ரி­யா­கப் பொழிய அவர் சுருண்டு நிலத்­தில் விழுந்து விடு­வார். அலி வெற்­றி­வாகை சூடு­வார்.
சிக்­கி­யுள்ள சிங்­க­ளத் தலைமை
இதனை எதற்­காக இங்கு கூறி­னேன் என்று நினைப்­பீர்­கள். கார­ணம் இருக்­கின்­றது. எமக்கு உரித்­துக்­க­ளைத் தர­ம­றுக்­கும் சிங்­கள அர­சி­யல் தலை­மைத்­து­வம் தற்­போது வலுக்­கு­றைந்து வரு­கின்­றது. அர­சி­யல் பிரச்­ச­னை­கள், பொரு­ளா­தா­ரப் பிரச்­சி­னை­கள், கடன் சுமை­கள், பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் கடு­மை­யான சாடல்­க­ளுக்கு உள்­ளாகி வரு­வது இவ்­வா­றான பல இடர்­க­ளைச் சந்­தித்து வரு­கின்­றது சிங்­க­ளத் தலை­மைத்­து­வம். பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்­குக் கொடுத்த வாக்­கு­று­தி­களை இயற்­றா­மல் இருந்து மேலும் மேலும் தவணை கேட்­பது அர­சின் மேல் உலக நாடு­க­ளுக்கு இருக்­கும் மதிப்­பைக் குறைத்­துக் கொண்டு வரு­கின்­றது. இந்த நேரத்­தில் நாங்­கள் மொக­மட் அலி­யி­டம் இருந்து பாடம் படித்­துக் கொள்ள வேண்­டும்.
இந்­தத் தரு­ணத்­தில்த்­தான் தமிழ் மக்­கள் ஒன்­று­பட்டு எமக்கு நேர்ந்த, நேர்ந்து கொண்­டி­ருக்­கும் இடர்­க­ளைப் பற்றி எல்­லாம் உல­க­றி­யச் செய்ய வேண்­டும். சுயாட்­சியை வழங்க அவர்­களே முன்­வர வேண்­டும். ஒரு கட்­டத்­தில் தமது தேவை­யின் நிமித்­தம் எமக்­கு­ரிய சுயாட்சி உரி­மையை அவர்­கள் கைய­ளிக்­கும் சந்­தர்ப்­பம் ஏற்­ப­டும் என்­ப­தில் நாங்­கள் திட­மான நம்­பிக்கை வைக்க வேண்­டும். நம்­பிக்கை ஒளி மல­ரத் தொடங்­கி­னால் இளை­யோர் ஏன் நாம் எல்­லோ­ருமே புதுத்­தென்பு பெறத் தொடங்கி விடு­வோம்.
நம்­பிக்­கை­யீ­னத்­தால் தகாத விளைவு
இளை­யோ­ரி­டத்­தில் நம்­பிக்­கை­யீ­னம் குடி­கொண்­ட­தால்த்­தான் அவர்­கள் சில தகாத வழி­க­ளிலே செல்ல எத்­த­னிக்­கின்­றார்­கள். பரீட்­சை­க­ளில் போதிய புள்­ளி­கள் இல்­லாமை, மன­தில் குறிக்­கோள் இல்­லாமை, குடும்­பங்­க­ளுக்­குள் ஏச்­சுப் பேச்­சுக்­கள் என்று பல கார­ணங்­க­ளைக் கூற­லாம். சில­ருக்கு வெளி­நாட்­டுப் பணம் வந்து சேர்­வ­தால் அத­னைப் பாவிக்­கத் தெரி­யா­மல் திண்­டா­டும் நிலை­மை­யும் அவர்­களை ஆத்­தி­ரம் அடைய வைக்­கின்­றது. சிலர் வெளி­நாட்­டுப் பணத்தை உப­யோ­கித்து மோட்­டார் சைக்­கிள்­களை வாங்­கு­கின்­றார்­கள். மது அருந்­து­கின்­றார்­கள். வாக்கு வாதங்­க­ளில் ஈடு­ப­டு­கின்­றார்­கள். வன் செய­லி­லும் ஈடு­ப­டு­கின்­றார்­கள்.
அவர்­கள் மன­தில் குறிக்­கோள் இல்­லா­ததே இதற்­குக் கார­ணம். ஒன்­றில் உயர் கல்வி ரீதி­யாக நான் இந்­த­வா­றாக வரு­வேன் என்ற ஒரு குறிக்­கோள் இருக்க வேண்­டும். அல்­லது விளை­யாட்டு ரீதி­யாக அவ்­வா­றான குறிக்­கோள்­கள் இருக்­க­லாம் அல்­லது வணிக ரீதி­யா­கக் குறிக்­கோள்­கள்; இருக்­க­லாம். இல்லை என்­றால் ஏதா­வது ஒரு சம­யம் சார்­பான குறிக்­கோள்­கள் கூட இருக்­க­லாம். குறிக்­கோள்­கள் அவ­சி­யம் என்­பது எம் எல்­லோ­ருக்­குந் தெரி­யும். அர­சி­யல் ரீதி­யாக ஒரு குறிக்­கோ­ளை­யும் அதனை அடை­யும் வழி­மு­றை­க­ளை­யும் நாம் இளை­யோ­ருக்­குச் சொல்­லிக் கொடுத்­தோ­மா­னால் அவர்­களை நாம் எமது சமூ­கத்­தின் மிக வலு­வான ஒரு அல­காக மாற்­றி­ய­மைக்க முடி­யும்.
எண்­ணம் ஏன் வந்­தது ?
ஆகவே தான் இளை­ஞர் கருத்­த­ரங்­கங்­களை தமிழ் மக்­கள் பேரவை ஒழுங்கு படுத்த முன் வந்­த­மை­யின் கார­ணத்தை இப்­பொ­ழுது நீங்­கள் ஓர­ளவு உணர்ந்­தி­ருப்­பீர்­கள். இவ்­வா­றான ஒரு எண்­ணம் என்­னுள் பரி­ண­மித்­தது எப்­பொ­ழுது என்று கேட்­டீர்­க­ளா­னால் எனது விடை நகைச்­சு­வை­யாக இருக்­கும்.
என்­னைப் பத­வி­யில் இருந்து விரட்ட எம் மாகாண சபை உறுப்­பி­னர்­கள் பல சதி­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். ஆனால் ‘நாம் உங்­க­ளு­டன்’ என்று இளை­ஞர்­கள் ஒன்று கூடித் தமது ஆத­ரவை வெளிப்­ப­டுத்­திய போது நான் ஒன்­றைக் கூறி­னேன். அது நன்­றிப் பெருக்­கில் என்னை அறி­யாது வெளி­வந்த சொற்­கள். ‘நானும் உங்­க­ளு­டன் இருப்­பேன்’ என்று கூறி­னேன். பதவி பறி போகின்­றதோ இல்­லையோ ‘நான் உங்­க­ளு­டன்’ என்ற போது தான் என்­னால் இளைய சமு­தா­யத்­திற்கு ஆற்ற வேண்­டிய கட­மை­கள் என்ன என்ற கேள்வி உதித்­தது.
இளை­ஞர்­க­ளின் பலத்தை நன்­மைக்­கும் பாவிக்­க­லாம். தீய­ன­வற்­றிற்­கும் பாவிக்­க­லாம். தமிழ் மக்­கள் பேரவை அவர்­க­ளுக்கு நம்­பிக்­கை­யைக் கொடுத்து குறிக்­கோள்­க­ளைக் கொடுத்து மதிப்­பை­யும் கொடுக்க முன் வந்­தால் அவர்­கள் சமூ­கத்­தின் ஆர்­வ­லர்­க­ளாக மாறி­வி­டு­வார்­கள் என்ற முடி­வுக்கு வந்­தேன்.
இளை­யோரை தலை­யெ­டுக்க விட­வேண்­டும்
அர­சி­யல் கட்­சி­கள் இரண்­டாம் மட்ட அல்­லது மூன்­றாம் மட்ட இளை­யோ­ரைத் தலை­யெ­டுக்க விடாது அவர்­க­ளைத் தட்­டித் தட்டி வைப்­ப­தை­யும் நான் கண்­டுள்­ளேன். தலை­வர்­கள் தகைமை அற்­ற­வர்­க­ளாக இருக்­கும் போது தம்­மி­டத்தை மற்­ற­வர்­கள் பிடித்­துக் கொள்­வார்­களோ என்று அவர்­கள் சந்­தே­கிப்­பது நாம் கண்டு வரும் ஒரு நிகழ்வு. தகை­மை­யு­டை­ய­வர்­களை மேலெ­ழும்ப விட வேண்­டும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை தமிழ் மக்­கள் பேரவை செய்ய வேண்­டும். இளை­யோரை அடை­யா­ளம் கண்டு எம்­மு­டன் இணைத்­துக் கொள்ள முன் வர வேண்­டும். முத­லில் இளை­ஞர் அணிக்­குள்­ளும் காலம் செல்­லச் செல்ல மையச் செயற் குழு­வுக்­குள்­ளும் அவர்­களை ஈர்க்க வழி அமைக்க வேண்­டும்.
தமிழ் மக்­கள் பேரவை எமது இளைய சமு­தா­யத்தை எவ்­வாறு வழி நடத்­து­வது என்ற விட­யத்­தில் சிந்­தித்­துப் பற்­று­று­தி­யு­டன் செயற்­பட வேண்­டும். நாம் வெறும் கட­மைக்கு வேலை செய்­ப­வர்­க­ளாக இருந்­தால் எம்­மீது இளை­ஞர் சமு­தா­யத்­திற்கு சந்­தே­க­மும், ஆத்­தி­ர­மும், கோப­மும் வந்து விடும். எம்­முள் அன்­பும் கரி­ச­னை­யும் மேலெ­ழுந்­த­தால்த்­தான் அவர்­கள் எம் வழிக்கு வரு­வார்­கள்.
இளை­ஞர்­க­ளுக்­கான குறிக்­கோள்­களை அவர்­கள் மன­தில் உள்­ள­டக்க நாம் பாடு­பட வேண்­டும். கூடு­மான வரை­யில் வேலை­யில்­லா­த­வர்­க­ளுக்கு வேலை வாய்ப்­புக்­க­ளைப் பெற்­றுக் கொடுக்­க­வும் நாங்­கள் முன்­வர வேண்­டும். உன்­னத குறிக்­கோள்­களை இளை­ஞர் அணி­கள் மத்­தி­யில் விதைத்­தால் பயிர்­கள் செழித்து வள­ரு­வன. சமூ­கம் மறு­ம­லர்ச்சி அடை­யும். இளை­யோரை அர­சி­யல் ரீதி­யாக ஆற்­றுப்­ப­டுத்த நாம் எம்­மைத் தயார்ப்­ப­டுத்­திக் கொள்­வோம் – என்­றார்.
Powered by Blogger.