எரிபொருள் விலையேற்றம் – கடலுக்குச் செல்ல மீனவர்கள் மறுப்பு!

எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேருவளை தொடக்கம் மன்னார் வரையான மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல மறுப்புத் தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
எரிபொருக்கான மானியம் வழங்கப்படுதாக அரசு தெரிவித்திருந்த போதும் அது பயனற்ற ஒரு விடயம் எனவும், இவ்வாறு ஒரே முறையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதால் மீனவர்கள் பெரும் கஷ்டங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், சிலாபம் நகரின் பல பகுதிகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. சிலாபம் மீன் விற்பனை நிலையமும் மூடப்பட்டுள்ளது. படகுகள் கடலுக்கு செல்லாமல் தரித்து விடப்பட்டுள்ளன.
Powered by Blogger.