சீரற்ற காலைநிலை: 8 பேர் மரணம்!

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மழை, வெள்ளம், மின்னல், மண்சரிவு, நீரில் மூழ்குதல் ஆகியவை காரணமாக இது வரை 08 பேர் மரணமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
இவ்வனர்த்த நிலைமை காரணமாக,
 • 08 பேர் மரணமடைந்துள்ளனர்.
 • 07 பேர் காயமடைந்துள்ளனர்.
 • 18 மாவட்டங்களைச் சேர்ந்த 9,817 குடும்பங்களின் 38,046 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
 • 19 வீடுகள் முழுமையாகவும், 918 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன
 • 03 சிறு மற்றும் மத்திய தொழில் முயற்சிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.
 • 05 அடிப்படைக் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக நிலையம் அறிவித்துள்ளது.
குறித்த அனர்த்தம் தொடர்பில்,
 • 80 பாதுகாப்பான அமைவிடங்களில் 1,625 குடும்பங்களைச் சேர்ந்த 6,090 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மரணமடைந்தோர்
 • மரம் வீழ்ந்து/ மரம் முறிந்து - 02
 • வெள்ளம்/ நீரில் மூழ்கி - 02
 • மின்னல் தாக்குதல் - 03
 • கடும் காற்று - 01
மரணமடைந்தோர் மாவட்ட ரீதியாக
 • கேகாலை - 02
 • பொலன்னறுவை - 02
 • காலி - 01
 • களுத்துறை - 01
 • புத்தளம் - 01
 • மொணராகலை - 01
Powered by Blogger.