மூடப்பட்டுள்ள அச்சுவேலி வசாவிலான் வீதி திறக்கப்படுமா??

வலி.வடக்கில் படையினர் வசமுள்ள மூன்று வீதிகளை மக்கள்
பாவனைக்கு திறந்துவிடுமாறு கூட்டமைப்பு எம்.பி.க்கள் பிரதமரிடம் கோரியுள்ளனர்.

யாழ்.மாவட்ட அபிவிருத்தி கூட்டத்துக்கு முன்பாக பிற்பகல் 2 மணியளவில் காணி விவகாரம் தொடர்பில் விசேட கூட்டமொன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

பிரதமர் தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் மீள்குடியேற்ற அமைச்சர் ஐ.எம்.சுவாமிநாதன்இ இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இ கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான

மாவைசேனாதிராஜா இ எஸ்.ஸ்ரீறீதரன் மற்றும் ஈ.சரணவணபவன் 15 பிரதேச செயலர்கள் பொலிஸ் மற்றும் படைத்தரப்பினர் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போதே மேற்படி கோரிக்கை விடுவிக்கப்படாத தெரிவிக்கப்படுகிறது.

வலி.வடக்கில் அச்சுவேலி-வசாவிளான் வீதிஇ கீரிமலை -காங்கேசன்துறை வீதி

நேரக்கட்டுப்பாட்டுடன் உள்ள பொன்னாலை -பருத்தித்துறை வீதிகளை மக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக திறந்து விடுமாறு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இவ்வீதியை மூடி வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லையென்பது குறித்து அவர்கள் விரிவாக எடுத்துக்கூறின் இந் நிலையில் இதுகுறித்து ஆராய்ந்து பேசிய பின் கூடிய விரைவில் விடுவிக்கப்படுமென பாதிலளிக்கப்பட்டதாக கூட்டத்தில் பங்குபற்றிய தரப்பினர் குறிப்பிட்டனர். 
Powered by Blogger.