நிமிர்வுக்கு உரமானோர் நினைவிடம்...!

நூறுநாள் அகிம்சைப்போர்

இறுதியில் இரத்த ஆறாய்.....!
உயிர்பலியோடு .....!
உலக கவனயீர்ப்போடு.....!
பணிந்தது அரசு.....!
விடுதலை முரசு வீறுடன் புரட்சியாய்.....!

உயிர் கொடுத்தவர்க்கு ஒரு
அஞ்சலிப் பொதுப்பீடம்
அமைத்து அஞ்சலிப்பீர்...அது
அகிம்சை தோற்ற கதையை.....!
ஆள்வோரின் முகமூடி கிழித்த கதையை....!
மக்கள் புரட்சியின் மகத்துவத்தை....
இளைய சந்ததிக்கு உரைத்து நிற்கும்.

சொந்தமண்ணை சொந்தக்காரரே
ஆள வேண்டும் என்ற வீரம் சொல்லும்.
அந்நிய முதலைகளுக்கு
சாவுமணி அடித்த பெருமை சொல்லும்...
தமிழன் ஆளப் பிறந்தவன்
அடிமையில்லை என்ற வீரம் சொல்லும்...
இது ஆரம்மமே முடிவல்ல என்று
அஞ்சலிப் பீடம் கடக்கையில் வீரம் சொல்லும்

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija
Powered by Blogger.