தாதி எழுதிய உருக்கத்தடன் உயிர் பிரியும் தருணத்தில் மடல்!

நிபா வைரஸ் கேரளாவில் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது.
கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் பலரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் மருத்துவக் குழு கேரளாவில் முகாமிட்டுள்ளது.
 
இந்நிலையில்,  நிபா வைரஸ் தாக்கிய நோயாளிக்கு சிகிச்சை அளித்த லினி புதுசேரி என்ற செவிலி நோய் தாக்கப்பட்டு இறந்தார். இறக்கும் முன் அவர் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அந்தக் கடிதம் பின்வருமாறு
சாஜி சேட்டா, 
நான் எனது முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் உங்களைப் பார்க்க முடியும் என்ற நம்பிக்கைகூட எனக்கு இல்லை. மன்னிக்கவும். நமது குழந்தைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். விவரமறியா அந்தக் குழந்தைகளை உங்களுடன் வளைகுடா நாட்டுக்கே கூட்டிச் சென்றுவிடவும். நமது தந்தையைப் போல் அவர்களும் தனியாக இருக்கக்கூடாது.
 அன்புடன்..லினி
இவ்வாறு அந்தக் கடிதத்தில் அவர் தனது கடைசி நிமிட உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார்.  இரண்டு பிஞ்சுக் குழந்தைகளை விட்டுப் பிரிந்த லினியின் உடல் அவசரமாக அடக்கம் செய்யப்பட்டது. நோய் மற்றவர்களுக்கும் பரவிவிடக்கூடாது என்பதால் உறவினர்களிடம் லினியின் உடல் ஒப்படைக்கப்படவில்லை.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேலும் 2 செவிலியர் நிபா வைரஸ் தாக்கி சிகிச்சையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Powered by Blogger.