முள்ளிவாய்க்கால் உறவுகளுக்கு வவுனியாவில் அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த மக்களுக்கு வவுனியா குட்செட் வீதியில் உள்ள கருமாரி அம்மன் ஆலயத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டதுடன், ஆத்மசாந்தி பிரார்த்தனையும் இடம்பெற்றது.

 வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராத லிங்கம்,வட மாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரன், சே.மயூரன்,வவுனியா நகரசபை உப தவிசாளர் குமாரசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர் .Powered by Blogger.