அடுத்த சாக்லேட் பாய் ரெடி!

ஆண் ரசிகர்கள் அளவுக்கு, பெண் ரசிகைகளுக்கு சினிமாவில் ஓர்
ஆதர்ச நாயகன் கிடைப்பதில்லை. எப்போதாவது ஒரு மாதவன், ஒரு அரவிந்த் சாமி என அவர்களுக்கு ஒரு ஹீரோ கிடைக்கிறார். அதுவும் படம் நடித்து வெற்றிபெற்ற பிறகுதான். ஆனால், முதல் படம் நடிப்பதற்கு முன்பே தமிழகத்தின் டீனேஜ் பெண்களிடம் அதிகம் பெயர்பெற்றுவிட்டவர் டொவினோ தாமஸ். தொகுப்பாளினி டிடி (திவ்யதர்ஷினி) உடன் டொவினோ தாமஸ் நடித்திருந்த ‘உலவிரவு’ பாடல் மூலம் தமிழில் அதிக ரசிகைகளை டொவினோ தாமஸுக்குக் கிடைத்துள்ளனர்.
தற்போது ‘அபியும் நானும்’ படத்தின் மூலமாக அறிமுகமாகக் காத்திருக்கும் டொவினோ தாமஸ், ஏற்கனவே தமிழில் வெற்றிபெற்றுவிட்டது போல உணர்வதாகக் கூறினார். “தமிழ் சினிமா ரசிகர்களுக்கென ஒரு சிறப்பு இருக்கிறது. கோலிவுட்டுக்கு நடிக்க வருபவர்களை வேற்றுமை பாராமல், திறமையை முன்னிறுத்தி வரவேற்பது அவர்களது வழக்கம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா, எனக்கு சிவப்புக் கம்பள வரவேற்பே கொடுத்தது போல உணர்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
சாதாரண சாக்லேட் பாய் கேரக்டர் என்று இல்லாமல், உணர்வுபூர்வமான கேரக்டரில் டொவினோ நடித்திருக்கிறார். நல்லதொரு ரொமாண்டிக் காதல் திரைப்படத்தை டொவினோ தாமஸ் மற்றும் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் பியா பாஜ்பாய் ஆகியோர் கொடுப்பார்கள் என்று டொவினோ நம்புகிறார்.

Powered by Blogger.