கடுவலை - பியகம நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் ஆபத்தான நிலையில்!

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கடுவலை - பியகம நகரங்களை இணைக்கும் பிரதான பலம் ஆபத்தான நிலையை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இதன் காரணமாக அந்தப் பாலத்தின் மீதான வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் அத தெரண வினவியபோது, அந்த இடத்தை சோதனை செய்வதற்காக பொறியியலாளர்கள் குழுவொன்று தற்போது அனுப்பப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்தது.
Powered by Blogger.