பளை பேருந்துத் தரிப்பிடத்தில் வர்த்தகர்கள் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் பளை பேருந்துத்
தரிப்பிடத்தில் இன்று நடைபெற்றது.

பளை வர்த்தக சங்கத்தினர் கடைகளை மூடி, பேருந்து நிலையத்தில் ஒன்றுகூடி தமது அஞ்சலி நிகழ்வை முன்னெடுத்தனர். வர்த்தக சங்க தலைவரால் பொது சுடர் ஏற்றி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்வில் வர்த்தகர்கள், பொது மக்கள், விளையாட்டுக்கழக வீரர்கள் கலந்து கொண்டனர்.
Powered by Blogger.