வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக பட்டதாரிகள் போராட்டம்!

வழிகாட்டல் மற்றும் உளவியல் பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்கக் கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
”தகுதியுடையவர்களுக்கு பொருத்தமான நியமனங்களை வழங்குங்கள். வடமாகாண கல்வி அமைச்சின் செயற்பாடுகள், தவறான வழிகாட்டலின் கீழ், மாணவர்களை அழிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன” என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
தமக்கான வேலைவாய்ப்பினை வழங்காத பட்சத்தில் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் பட்டதாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Powered by Blogger.