பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் நாளை!

நாளைய தினம் பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார். 

தேசிய அரசாங்கத்தின் நான்காவது அமைச்சரவை திருத்தத்தின் படி புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அதன்படி புதிய அமைச்சர்கள் 18 பேர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். 

ஏனைய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகள் இருப்பது போன்றே செயற்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. 

இந்த அமைச்சரவையின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நாளை காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர். 

இதற்காக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
Powered by Blogger.