ஏழு நட்சத்திர சொகுசு வீட்டுத்தொகுதி கட்டடம்!

இலங்கையில் ஏழு நட்சத்திர சொகுசு வீட்டுத் தொகுதி கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கையொன்றில் சீனாவின் முன்னணி நிறுவனம் ஒன்று கைச்சாத்திட்டுள்ளது.

சைனா ஹார்பர் இன்ஜினியரிங் (China Harbor Engineering) நிறுவனமே இலங்கையுடன் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

கொழும்பு 4 இல் 300 மில்லியன் ரூபா முதலீட்டில் இந்த கட்டடத் தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.

50 மாடிகளைக் கொண்ட இந்த இரட்டைக் கோபுரக் கட்டடம், 584 அலகுகளைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.