இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்க்கு கலாநிதி பட்டம்!

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அரசியல் விஞ்ஞானத்துறையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.
இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்றில் அரசியல் விஞ்ஞானத்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற முதலாவது அரசியல்வாதி என்ற பெறுமையை அவர் இதன் மூலம் பெற்றுக்கொண்டார்.
பட்டமளிப்பு விழா கோல் பேஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வீடமைப்பு மற்றும் அபிவிருத்தி பிரதியமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Powered by Blogger.