அமைச்சரவை திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரம்!

மேலும் சில பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் விரைவில் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ஐக்கிய தேசிய கட்சியின் பின் நிலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இந்த அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 தற்போதைக்கு பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படாத அமைச்சுக்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இதேவேளை, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியாகவில்லை.

 எனினும், அமைச்சரவை திருத்தம் தொடர்பான அறிவித்தல் இந்த வாரம் வெளியிடப்படும் என அரச அச்சக கூட்டுத்தாபன தலைவர் கங்கானி லியனகே தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.