திலும் அமுனுகம விசாரணைக்கு அழைப்பு!

 ஒன்றிணைந்த எதிரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம   பயங்கரவாதவிசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

 அண்மையில் கண்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் எதிர்வரும் 10 ஆம் திகதி அழைக்கப்பட்டுள்ளார்.

 எனினும் 10 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், வேறொரு தினத்தில் பயங்கரவாத விசாரணைப்பிரிவில் முன்னிலையாகுவதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

 அண்மையில் கண்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் 353 பேர் கைது செய்யப்பட்டதுடன், 220 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 இவர்கள் தவிர்ந்த 132 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.