பொலிஸ் அரண்கள் - யாழ்ப்பாணத்தில் திறப்பு!

பொதுமக்களின் ஒத்துழைப்பைப் பெறு வதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற நோக்கிலான ஒரு மாதம் செயற்படும் பொலிஸ் அரண்கள் இலங்கைப் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்ப் பாண மாவட்டத்துக்குட்பட்ட பல கிராமங்களில் நேற்று திறந்து வைக்கப்பட்டன.

 கல்வி, சுகாதார, கலாசாரம், சமயம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் ஊடாக மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான தொடர்பு அதிகரிக்கும். இதனை அடிப்படையாக கொண்டு கிராமத்துக்கு ஒரு பொலிஸ் தொடர்பு என்னும் அடிப்படையில் இந்த அரண்கள் திறந்து வைக்கப்பட்டன.

 அதன்படி சங்கானை பொலிஸ் நடமாடும் சேவை சங்கானைப் பேருந்து நிலையத்துக்குமுன் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுசித்தகுமார கலந்து கொண்டு பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்தார்.

வண்ணார்பண்ணையில் யாழ்்ப் பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர் ணாண்டோ ஆரம்பித்து வைத்தார்.  மீசாலை சங்கத்தா னைப் பிரிவுகளுக்கான நிலையம் மீசாலை கிழக்கு மதுவன் சனசமூக நிலையத்திலும் கொடிகாமம் பொலிஸ் பிரிவின் நடமாடும் சேவை கள் நிலையம் வரணியிலும் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட் டன.
 வல்வெட்டித்துறை பொலிசாரின் நடமாடும் பொலிஸ் சேவை வல்வெட் டித்துறை ஞான வைரவர் முன்பள்ளி யில் ஆரம்பிக்கப்பட்டது. காங்கேசன்துறை உதவி பொலிஸ் அத்தியட்சர் டீகே.பியந்த பொலிஸ் அரணைத் திறந்து வைத்தார்.

 இந்தப் பொலிஸ் நிலையங்களில் மக்கள் தமக்குத் தேவையான சேவை களைப் பெற்றுக்கொள்ள முடியும். தொலைந்த தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதிய அனுமதிப் பத்திரம் கடவுச்சீட்டு போன்ற வற்றுக்கான பொலிஸ் அறிக்கை வழங்கல் உள்ளிட்ட பல சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Powered by Blogger.