காட்டு யானைத் தாக்கி ஒருவர் பலி!

மின்னேரிய  ; தியபெதுவம பிரதேசத்தில் இன்று காலை காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

 இவ்வாறு உயிரிழந்துள்ளவர் தியபெதுவம - இஹகுலுவெவ பிரதேசத்தை சேர்ந்த 59 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

 அவர் இன்று காலை தமது வீட்டுத் தோட்டத்திற்கு சென்ற வேளையே இந்த காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

 இக்காலப்பகுதியில் அறுவடை இடம்பெறுவதால் மின்னேரிய தேசிய பூங்காவில் உள்ள யானைகள், கிராம புறங்களுக்குள் நுழைவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.