இறுதிப்போரில் ஊடகப்பணியாற்றிய பிரதான ஊடகவியலாளர்களில் சிவகரனும்!

இறுதிப்போரில் ஊடகப்பணியாற்றிய பிரதான ஊடகவியலாளர்களில்
சிவகரனும் ஒருவர். தன் தற்காலிக வீட்டினில் எறிகணை வீழும் வரைக்கும் தன் வீடியோ கமராவினை கீழே வைக்காத ஒருவர். இன்றும் முள்ளிவாய்க்கால் தொடர்பான வீடியோக்காட்சிகளை முகநூல்களில் நீங்கள் பகிரும் பல வீடியோக்களில் இவருடைய அயராத உழைப்பும் அடங்கியிருக்கிறது. 


முள்ளிவாய்க்கால் இறுதிநாளில் நடந்த துயர் நிறைந்த காட்சியினை தன் கண்களால் பதிவாக்கியிருக்கிறார். அக்காட்சியில் ஒன்று..
-போரில் படுகாயமடைந்த ஒரு தொகுதி போராளிகளுடன் இரண்டு உழவு இயந்திரங்கள் வீதியில் மெல்ல மெல்ல வருகிறது. அதில் உள்ள போராளிகள் அனேகமானோர் பெண் பிள்ளைகள் அழுதபடி இருக்கின்றார்கள். தூயவன் அரசறிவியல் கல்லூரியின் முதல்வராக கடமையாற்றிய அரசண்ணா அவர்கள் மக்களை நோக்கி கெஞ்சுகிறார். “ இந்த பிள்ளைகளின் முகத்தை பார்த்திட்டு போங்கோ உங்கள் பிள்ளையென்றா கூட்டிக்கொண்டு போங்கோ. அம்மா, ஐயா ஒருக்கா வந்து பாருங்கோ” என்று அழுது அழுது கெஞ்சிய அந்தக் காட்சியினை சிவகரன் மனங்கலங்கி தெரிவித்தார்.
Powered by Blogger.