யாழ் மாநகரின் முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?

யாழ்ப்பாணம் மாநகர் ஸ்ரான்லி வீதி தபாலகத்துக்கு முன்பாக குப்பை
சேகரிப்புக்கான தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள போது, திண்மக் கழிவுகள் வீதிகளிலேயே வீசப்படுகின்றன என்று பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அந்தப் பகுதியில் சீரான திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்தை பேணுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் மக்கள் முன்வைக்கின்றனர்.
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி தபாலகத்துக்கு முன்பாக மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவப் பிரிவால் திண்மக் கழிவுத் தொட்டிகள் தரம்பிரித்து வைக்கப்பட்டுள்ளன. எனினும் குப்பைகளை தொட்டிகளுக்குள் போடாமல், அந்த இடத்தில் வீதிகளில் சிலர் வீசுகின்றனர்.
இதனால் ஸ்ரான்லி வீதியில் பயணிப்போர் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
“வேறு பகுதிகளிலிருந்து வரும் சிலர், பின்னிரவு அல்லது அதிகாலையில் குப்பைகளை வீதியில் வீசிவிட்டுச் செல்கின்றனர். மாநகர சபை கழிவகற்றல் பிரிவும் சீரான முறையில் குப்பைகளை இந்த இடத்திலிருந்து அகற்றுவதில்லை.
இதனால் வீதியில் செல்லும் கட்டக்காலி மாடுகள் மற்றும் அப்பகுதியுள்ள நாய்கள் குப்பைகளை இழுத்துச் சென்று வீதியில் விடுகின்றன” என்று அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
“சுத்தமான மாநகரம் என்ற கொள்கையுடன் ஆட்சியதிகாரத்துக்கு வந்த யாழ்ப்பாண மாநகரின் முதல்வர் இமானுவேல் ஆனொல்ட், ஸ்ரான்லி வீதி தபாலகத்துக்கு முன்பாகவுள்ள கழிவகற்றல் பகுதியில் சீரான கழிவகற்றல் முகாமைத்துவத்தை பேணுவதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்பதே அந்தப் பகுதியில் வசிக்கும் எதிர்பார்ப்பாகும்.
அத்துடன், பொது இடத்தில் குப்பைகளை வீசுவோரை சட்டத்தின் முன் நிறுத்தும் செயற்றிட்டம் ஒன்றை நடைமுறைக்கு கொண்டு வருவதன் ஊடாகவே கழிவகற்றல் முகாமைத்துவத்தை ஒழுங்கமைக்க முடியும்.முதல்வர் செய்வாரா?
Powered by Blogger.