திருகோணமலை மாதிரிக்கிராமங்கள் மக்களிடம் கையளிப்பு!

திருகோணமலை மாவட்டத்தின கோமரங்கடவெல கல்யானபுர பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொகுனுகம, ரன்சிரிகம ஆகிய மாதிரிக்கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

மாதிரிக்கிராமத்திலுள்ள 49 வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.


அமைச்சர் சஜித் பிரேமதாச இந்த நிகழ்வில் உரையாற்றுகையில்,

தமது நோக்கம் மக்கள் சேவையை எவ்வித வேறுபாடின்றி அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் செய்வதாகும். வீடற்றவர்களுக்கு வீடு வழங்குவது தொடர்ச்சியாக நடைபெறும். தற்போது 706 மாதிரிக்கிராமங்களின் வேலை ஆரம்பித்துள்ளது. தமது எதிர்பார்ப்பு 2500 மாதிரிக்கிராமங்களின் வேலைகளை அடுத்த வருடம் நிறைவு பெறுவதற்குள் ஆரம்பிப்பதாகும்; என்று குறிப்பிட்டார்.


மேலும், சொந்துறு பியச கடன் 50 குடும்பங்களுக்கும், சிறுநீரக நோயாளிகள் 20 பேருக்கான உதவிகள், சில்;ப சவிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான உதவிகளும் இதன்போது அமைச்சரினால் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மஹ்ரூப், அப்துல்லா மஹ்ரூப்,சேருவல தொகுதி ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் அருன சிரிசேன,மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.