அமைச்சராவதற்கான முக்கிய தகுதி ஊழலில் ஈடுபடுவதுதான்!

ஊழலில் ஈடுபடுவதுதான் அமைச்சராவதற்கான  முக்கிய தகுதியா என்ற கேள்வி  எழுந்துள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த இரு நாட்களாக இடம்பெற்ற அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் மாற்றம் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நான் ஒருபோதும் ஊழலில் ஈடுபட்டதில்லை ஆனால் எனக்கு பிரதியமைச்சர் பதவியே கிடைத்துள்ளது இதன் காரணமாக அமைச்சர் பதவியை பெறுவதற்கு  நான் ஊழலில் ஈடுபடவேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் ஊழலிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் ஊழலில் ஈடுபட்டவர்களை அம்பலப்படுத்தியுள்ளேன் தொடர்ந்தும் அவ்வாறு செயற்படுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.