இன்று 12 மணி நேர நீர் விநியோகத் தடை!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மாலை 7 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை 12 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

 களனி தெற்கு நீர் சேமிப்பகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப் பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக அந்த சபை அறிவித்துள்ளது.

 இதற்கமைய, களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார பிரிவுகள் மற்றும் பேலியகொடை, வத்தளை, ஜா-எல மற்றும் கட்டுநாயக்க மற்றும் சீதுவ நகர சபை அதிகார பிரிவுகளிலும் இந்த நீர் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Powered by Blogger.