பிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய 12 வயது சிறுவனின் உயிர் பிரிந்தது!

மட்டக்களப்பு - கிரான் பகுதியில் நேற்று முன் இரவு இடம்பெற்ற
வாகன விபத்தில் பிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சகோதரன் மற்றும் அவருடைய தந்தை ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரவுநேரப் பேருந்தும், கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற வானும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.

இதில் வானின் சாரதியான கல்லடி நொச்சிமுனையைச் சேர்ந்த பாலச்சந்திரன் வினோஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், பிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய சிறுவன் பிரகாஸ் கெவின் (12 வயது) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும், விபத்தில் மோசமாக காயமடைந்துள்ள உயிரிழந்த சிறுவனின் தந்தை மற்றும் சகோதரன் ஆகியோர் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.