2 வயது பெண் குழந்தை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பலி!

மாலிம்பொட பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 2 வயது குழந்தை ஒன்று இன்று (07) காலை 11 மணி அளவில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சீரற்ற காலநிலை காரணமாக தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் வசித்த வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அனர்த்தத்தின் போது ஒரு குழந்தை உயிர் தப்பியதுடன் படுகாயமடைந்த 2 வயது பெண் குழந்தை தெரணியாகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் தெரணியாகல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தெரணியாகல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.