ஓபிஎஸ், விஜய், அஜித்தை கலாய்க்கும் 'தமிழ்படம் 2.0' படத்தின் டீசர்!

சென்னை: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘தமிழ்படம் 2.0’ படத்தின் டீசர் தற்போது
வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு, புதுமுக இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியான படம் ‘தமிழ்படம்’. தற்கால தமிழ்சினிமாவை கலாய்த்து எடுக்கப்பட்ட இப்படத்தில் மிர்ச்சி சிவா, திஷா பாண்டே, பரவை முனியம்மா, சதீஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மிகவும் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்ட இந்தப் படம், ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.
இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதிலும், மிர்ச்சி சிவாவே ஹீரோவாக நடிக்க, சி.எஸ்.அமுதன் இயக்குகிறார். ஐஸ்வர்யா மேனன் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில், திஷா பாண்டே, சதீஸ், மனோபாலா உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.
இதனிடையே, இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. இதில், ஜெயலலிதா மறைவுக்கு பின் அழுதுகொண்டே முதல்வர் பதவியேற்ற, தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துப்பாக்கி விஜய் மற்றும் மங்காத்தா அஜித்தை கலாய்க்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், விக்ரம் வேதா படத்தையும் கலாய்க்கும் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த டீசர் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
Powered by Blogger.