நிர்மலா தேவிக்கு ஜூலை 5 வரை காவல் நீட்டிப்பு!

மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த உதவி பேராசிரியர் நிர்மலா தேவிக்கு ஜூலை 5 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர்

கலைக் கல்லூரியின் பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளைத் தவறான பாதையில் அழைத்துச் செல்லும் நோக்கத்தில் பேசிய ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, நிர்மலா தேவியைக் கைதுசெய்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில், செல்வாக்கு மிக்க பெரும் புள்ளிகளின் பெயர்களும் அடிபட்டன.
மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவி தன்னை விடுதலை செய்யுமாறு ஜாமீன் கோரி வருகிறார். ஆனால் அவரது ஜாமீன் மனு நேற்று (ஜூன் 20) 5 ஆவது முறையாகத் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் நிர்மலா தேவியை விருதுநகா் குற்றவியல் நடுவா் நீதிமன்ற எண் 2 இல் போலீஸார், இன்று (ஜூன் 21) ஆஜா்படுத்தினா். விசாரணையின் அடிப்படையில் நிர்மலா தேவியை ஜூலை 5இல் மீண்டும் ஆஜா்படுத்த நீதிபதி திலகேஸ்வரி உத்தரவிட்டார். அதன்படி அடுத்த 15 நாட்களுக்கு அவருக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய உதவி பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கு ஜூன் 26 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
Powered by Blogger.