அனந்தியா? சிவநேசனா?அமைச்சு பதவியை இழக்கபோவது யார்?

வடமாகாண மீன்பிடி அமைச்சராக இப்போதும் பா.டெனீஸ்வரனே பதவி வகிக்கிறார். என மேன்முறையீட்டு நீதிமன்றம்
தீர்ப்பளித்திருக்கும் நிலையில், தற்போது அமைச்சர்களாக உள்ள அனந்தி மற்றும் சிவநேசன் ஆகியோரின் பதவிகள் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதலமைச்சருக்குள்ள அதிகாரத்தின்படி வடமாகாண மீன்பிடி அமைச்சராக பதவி வகித்த மாகாணசபை உறுப்பினர் பா.டெனீஸ்வரன் பதவி நீக்கம் செய்ய ப்பட்டார். இதனை எதிர்த்து டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு

ஒன்றை தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்றய தினம் மேற்படி வழக்கில் தீர்ப்பு வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றம் பா.டெனீஸ்வரனிடம் இருந்து அமைச்சு துறைகள் பகிரப்பட்ட வர்த்தமான அறிவித்தலை இடைநிறுத்தியதுடன்,

தொடர்ந்தும் பா.டெனீஸ்வரனே பதவி வகிப்பதாக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அமைச் சர் டெனீஸ்வரனிடம் இருந்த அமைச்சு துறைகளை தற்போது ஏற்றிருக்கும் அமைச்சர்களாக அனந்தி சசிதரன் மற்றும் சிவநேசன் ஆகியோர் தொடர்ந்து பதவி வகிக்கலாமா?

என கேள்வி எழுந்துள்ளது. எனினும் அனந்தி அல்லது சிவநேசன் ஆகியோரில் ஒருவர் நிச்ச யமாக பதவியை இழப்பார் என மாகாணசபை வட்டாரங்கள் கூறுகின்றன.  

No comments

Powered by Blogger.