வடக்கு – கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேறாது!

வடக்கு கிழக்கில் இருந்து ஒருபோதும் முழுமையாக படையினரை அப்புறப்படுத்தப் போவதில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது.


குறித்த விடயம் தொடர்பில் வடக்கு கிழக்கில் பல்வேறு அரசியல் தலைவர்கள், மக்களை தவறாக வழி நடத்துவதாக சுட்டிக்காட்டிய இராணுவம், அங்கிருந்து எமது முகாம்களை அகற்றுமாறும் கோரி வருகின்றனர்.

நாட்டை தொடர்ந்தும் ஆபத்திற்குள் தள்ளுவதே இவர்களின் இவ்வாறான செயற்பாடுகள் எடுத்துரைப்பதாகவும், அத்துடன் இராணுவத்தை விட அவர்கள் பலமானவர்கள் என்று காட்டுவதற்காகவே இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திய இராணுவம், தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக நாட்டை முன்னுரிமை அடிப்படையில் பாதுகாக்க அனைத்து காலத்திலும் உறுதிபூண்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றுமாறு வடக்கு முதல்வர் உட்பட தமிழ் அரசியல் தலைமைகள் தெரிவித்து வந்த நிலையிலேயே இராணுவம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
Powered by Blogger.