ஜூலி கதாநாயகியாக நடிக்கும் ‘அம்மன் தாயி’ !

பிக்பாஸ் மூலம் பிரபலமான ஜூலி, தற்போது கதாநாயகியாக நடித்துவரும் ‘அம்மன் தாயி’ ஆடி மாதம் வௌியாகவுள்ளது.

மகேஸ்வரன் – சந்திரஹாசன் ஆகிய இருவரும் இணைந்து எழுதி, இயக்கிவருகின்ற இந்தப் படத்தில், அம்மனின் சக்தியை கட்டுப்படுத்தும் வில்லனை எப்படி அம்மன் வெல்கிறார்? என்பதே கதை.

காலங்காலமாக தமிழர்களின் அடையாளமாக இருந்து வருகின்ற கோயில்களில் முளைப்பாறி எடுப்பது என்பதில், முளைப்பாறியிலிருந்து அம்மன் எப்படி வருகிறார் என்பதை படத்தில் தனித்துவமாகக் காட்டியிருக்கிறார்கள்.

ஜூலி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தமையால் முதலில் இப்படத்தில் நடிக்கத் தயங்கினார். பின்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்து ஆவலுடன் நடித்தார்.

அம்மன் சம்பந்தப்பட்டகாட்சிகள் படமாக்கப்படும் நாட்களில் அதற்கான விரதங்களை நோற்று நடித்துக் கொடுத்தார். அதேபோல படத்தின் கிளைமாக்ஸில் அம்மன் நடனம் ஆடிக்கொண்டே வில்லனை வதம் செய்யும் காட்சி ஒன்று உள்ளது. அதற்காகவும் முறைப்படி பயிற்சி எடுத்துக்கொண்டு தான் நடித்துள்ளார் என படம் குறித்து இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.

‘அம்மன் தாயி’ படத்தின் முதல்தோற்ற போஸ்டர் வெளியாகியதையடுத்து, இது அற்புதமாக இருக்கப்போகிறது. இந்தப் படத்தின் மீது அதிக ஆர்வமாக உள்ளேன். இது திரைப்படம் மட்டுமல்ல, படக் குழுவினரின் கடுமையான உழைப்பும் கூட. உங்களுடைய வாழ்த்துகளால் இது வெற்றியை அடையவுள்ளது என கதாநாயகி ஜூலி தனது டுவிட்டர் பக்க்தில் குறிப்பிட்டுள்ளார். 
Powered by Blogger.