துப்பாக்கிச்சூடு குறித்து கண்டனம் தொிவிக்கப்பட்டுள்ளது – மத்திய அமைச்சா்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக தமிழக காவல் துறைக்கு
மத்திய அரசு கண்டனம் தொிவித்துள்ளதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் ரஜ்யவா்த்தன் சிங் ரத்தோா் இன்று கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டாா். நிகழ்ச்சி முடிவில் அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், உலக நாடுகள் இந்தியாவை புதிய நாடாக பாா்க்கின்றன. பருவநிலை மாற்றம் மிகப்பெரும் சவாலாக உள்ளது. கழிப்பிட வசதி 17 மாநிலங்களில் 3.6 லட்சம் கிராமங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய ராணுவத்்தை பலப்படுத்துவதுடன், நவீனமயமாக்கப்பட்டும் வருகிறது. 2020க்குள் 20 மாவட்டங்களில் விளையாட்டு பள்ளிகள் தொடங்கப்படும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக தமிழக காவல் துறைக்கு மத்திய அரசு கண்டனம் தொிவித்துள்ளது என்று அவா் கூறினாா்.
Powered by Blogger.