அம்மனாக நடிக்கும் பிக்பாஸ் புகழ் ஜூலி

அம்மன் தாயி’ என்ற படத்தில் பிக்பாஸ் புகழ் ஜூலி கதாநாயகியாக
நடித்துள்ளார்.

அம்மனின் மகிமைகளை விளக்கும் வகையில்,அம்மன் தாயி என்ற பெயரில் பக்தி கலந்த ஒரு சமூக படமாக தயாராகி வரும்இந்த படத்தில்கதாநாயகியாகவும், அம்மனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் ஜூலி.

புதுமுகம் அன்பு காதாநாயகனாகவும், சரண் வில்லனாகவும் நடிக்கின்றனர். மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் இந்த திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

அம்மன் தாயி’ திரைப்படத்தை பற்றி இயக்குநர் மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் கூறியதாவது:- ``அம்மனின் சக்தியை கட்டுப்படுத்தும் வில்லனை எப்படி அம்மன் பழிவாங்கிறார்? என்பதுதான் படத்தின் கதை . கோவில்களில் முளைப்பாறி எடுப்பது என்பது காலங்காலமாக தமிழர்களின் அடையாளமாக இருந்து வருகிறது. அந்த முளைப்பாறியில் இருந்து அம்மன் எப்படி வருகிறார்? என்பதை படத்தில் ஒரு முக்கிய காட்சியாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது.
படத்தின் கதாநாயகி ஜூலி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க யோசித்தார்.``நான் அம்மன் வேடத்துக்கு பொருந்துவேனா?'' என்று யோசித்தார். அம்மன் வேடத்தில் அவரை போட்டோ எடுத்து காட்டியபோது, வெகுவாக ஆச்சரியமடைந்தார். அவர் அம்மன் கதாபாத்திரத்துக்கு நூறு சதவீதம் பொருந்தியிருந்தார். இந்து பெண்ணாகவே மாறி, விரதம் இருந்து படத்தில் நடித்தார். வில்லனை, அம்மன் நடனம் ஆடிக்கொண்டே வதம் செய்யும் காட்சிக்காக பல முறை பயிற்சி எடுத்தார்.

விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, டெரிக்-கார்த்திக்-ராஜ் ஆகிய மூவரும் இசையமைத்து இருக்கிறார்கள். மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி கிராமத்தில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். ஆந்திர மாநிலம் பைரவக்கோனா என்ற இடத்தில், சில முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளோம். ஒரு பாடல் காட்சி தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன’’ என்று இருவரும் கூறியுள்ளனர்
Powered by Blogger.