முல்லைத்தீவு பகுதியில் கணியமணல் அகழ்வது தொடர்பில் கலந்துரையாடல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் பகுதியில் கணியமணல்
அகழ்வது தொடர்பில் அரசியல் தலைவர்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவருவது தொடர்பில் மாகாண அரசுடன் உரிய முறையில் எதுவும் கலந்துரையாடவில்லை என்ற பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.
இதன் பின்னர் இந்த திட்டத்திற்கு குழு ஒன்று அமைத்து, அந்த குழுவின் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாகாண முதலமைச்சரால் 7பேரும், வணிக வாணிப அமைச்சரால் 5பேரும், மாவட்ட செயலாளரால் 3 பேரும், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் மற்றும் குறித்த வட்டார உறுப்பினர் உள்ளடங்கலாக 17 பேரும் கலந்துரையாடி அறிக்கை இட்ட பின்னரே இது தொடர்பாக கலந்துரையாடப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், கலந்துரையாடலில் அமைச்சர் றிசாட் பதியுதீன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன், பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சி சிவமோகன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா மற்றும் மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்களங்களில் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.