தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மீழெழுச்சிபணி!

இறுதிப்போரின்போது மாவீரர்களை விதைத்த தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று காலை சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.தேவிபுரம் மாவீரர் துயிலுமில்ல செயற்ப்பாட்டு குழுவினரின் ஏற்பாட்டில் இந்தச் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு குறுகிய காலப்பகுதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டமையினால் இம்முறை முன்னதாகவே மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டதன் அடிப்படையிலேயே காணியினை துப்பரவு செய்து அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்குடன் இந்த சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.  
Powered by Blogger.