விசித்திரம்...!🍀🌷🍀🌷🍀

ஆடாதோடை செடியில்
செய்த பாவைக்கும்
பக்குவமாய் துணியுடுத்தி
பெண்மையை ஆண்மையை
போற்றிய சமூகம் எமது.-இன்று
நிர்வாண பொம்மைகள்
தெருத் தெருவாய் வந்ததால்
நிர்வாணமாகியது மனிதம்.

அன்று செடிப் பாவைக்கு
ஆடையுடுத்தி மானங்காத்த வழிகாட்டல்...
இன்று இறப்பர் பொம்மைகளுக்குள்ளும்
அங்கங்களைத் தேடும்
விசித்திர வியாதியாய்....
இன்னும் சங்கமருவிய காலத்தில் புதைந்து
பெண்களின் அங்கவர்ணிப்பில்
மதிமயங்கிய கவிக் கூட்டத்தின் அலப்பறை.

நவீனத்தை சுமந்து
விரைந்தோடும் உலகபந்தை
உதைத்து உருட்ட துடிக்கும்
துடிப்பு மிக்க காலத்தில்
பாடுவதற்கு எவ்வளவே பரந்திருக்க
விரகத்தை கால்களிடைத் தேடும்
விசித்திர மன நோயுடன்
தலைகளை கால்களிடைப் புதைத்து
கனவில் மெய்யுருகிக் கரைகின்றன.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija
Powered by Blogger.