வலுக்கும் வர்த்தகப் போர்!

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு இறக்குமதி வரியை இந்தியா விதித்துள்ளது.
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் ஏற்பட்ட வர்த்தகப் போரைப் போல இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும்

சத்தமில்லாமல் ஒரு வர்த்தகப் போர் மூண்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வர்த்தக நிலைகளில் அமெரிக்காவும், இந்தியாவும் மாறிமாறி குற்றம் சாட்டி வரும் நிலையில் இப்போது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில வேளாண் பொருட்கள் மற்றும் ஸ்டீல் பொருட்களுக்கு இந்தியா இறக்குமதி வரி விதித்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் சில உலோகப் பொருட்களுக்கு இறக்குமதி வரி விதித்தது. இதை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா முறையிட்டது. ஆனால் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிராக நாங்கள் எந்த வரியையும் விதிக்கவில்லை என்று அமெரிக்கா மறுத்து வருகிறது. அதேபோல ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு இந்தியா வரியை உயர்த்தியுள்ளதை அமெரிக்க அதிபர் வெளிப்படையாகக் குற்றம் சாட்டி வருகிறார். மேலும், கடந்த மாதத்தில் ஸ்டென்ட் கருவிகள் உள்ளிட்ட சில மருந்துப் பொருட்களுக்கு இந்தியா விலையைக் குறைத்தது. இதற்கு அமெரிக்க மருந்துப் பொருட்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
Powered by Blogger.