ஆசிரியர் பகவானின் பணியிட மாறுதல் ரத்து!

மாணவர்களின் பாசப் போராட்டத்தின் எதிரொலியாய் ஆசிரியர்
பகவானின் பணியிட மாறுதலை பள்ளிக்கல்வித் துறை இன்று (ஜூன் 26) ரத்து செய்தது.
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியகரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணி புரிந்து வந்த பகவான், பணி நிரவல் கலந்தாய்வில் திருத்தணி அருகே உள்ள அருங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதை ஏற்காத வெள்ளியகரம் அரசுப் பள்ளி மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பணி விடுப்பு உத்தரவு பெற வெள்ளியகரம் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பகவானை, “சார் போகாதீங்க சார்” என்று மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். மாணவர்களின் இந்த பாசப் போராட்டத்தை சமூக வலை தளங்கள் உட்பட எல்லா ஊடகங்களும் இந்த நிகழ்வை பேசு பொருளாக்கின.
மாணவர்களின் இந்த பாசப் போராட்டத்தால் ஆசிரியர் பகவானின் பணியிட மாறுதல் உத்தரவு, பத்து நாட்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் கல்வித்துறை, ஆசிரியர் பகவானை வெள்ளியகரம் பள்ளியிலேயே தொடர்ந்து பணியாற்ற இன்று அனுமதி அளித்துள்ளது.
Powered by Blogger.