யாழில் எரிக்கப்பட்ட நூலகம் சீரமைக்கப்படும்! செங்கோட்டையன் உறுதி!

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது சேதமடைந்த நூலகம் தமிழக அரசினால் சீரமைக்கப்படவுள்ளதாக தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப் பாடசாலையில், திறன் வழிக்கற்றல் வகுப்பறை மற்றும் கலை அரங்கம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,

“தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பிள்ளைகளின் மேல்நிலை கல்வி கற்பதற்கு ஏதுவாக குடியுரிமை சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.