காதலியை கத்தியால் குத்தி கொலை!

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாராவத்த, கன்னன்தொட்டப் பகுதியில் பெண்ணொருவர் இன்று காலை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.


6 ஆம் இலக்க லயம் வீட்டில் உள்ள பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று 118 என்ற இலக்கத்துக்கு தகவல் வழங்கப்பட்டது. அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

பாராவத்த, கொட்டியாகும்புரப் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய தங்கராஜா விஜயரானி என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில், பெண்ணின் காதலன் என அறியப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ருவன்வெல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
Powered by Blogger.