கண்ணகிபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட முல்லைநகர் வீட்டுத்திட்டம் நாளை மக்களிடம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கண்ணகிபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முல்லைநகர் வீட்டுத்திட்டம் நாளை மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.


குறித்த வீடுகள் 9 மணிக்கு இடம்பெறவுள்ள வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்களுக்காக வழங்கப்படவுள்ளதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிகழ்வில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ, உட்பட பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Powered by Blogger.